அறிந்து கொள்ள வேண்டிய ஆலோசனை
1.வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யாதீர்கள்.
2.முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளாதீர்கள்.
3.அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தாதீர்கள்.
4.மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை விடாதீர்கள்.
5 சண்டை வருமளவிற்கு விவாதத்தை தொடராதீர்கள்.
6.மனம் வெறுக்குமளவிற்கு செயல்களைச் செய்யாதீர்கள்.
7.அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையைச் சேர்க்காதீர்கள்.
8 பழிவாங்குமளவிற்கு பகையை வளர்க்காதீர்கள்.
9.கண்ணீர் வடியுமளவிற்கு கவலைப்படாதீர்கள்.
10. கர்த்தரின் அன்பை இழக்குமளவிற்கு கறைபடுத்திக்கொள்ளாதீர்கள்.
"பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்". வெளி 22: 11