🤝🤝🤝 உறவுகள் 🤝🤝🤝




💯 உறவுகளை காத்து குடும்பத்தை நடத்த தேவ அன்பு, தேவ ஞானம், நீடிய பொறுமை, சகிப்புத்தன்மை மிக மிக அவசியம்.


👫 முதல் உறவு, முக்கிய உறவு கணவன் மனைவி உறவே. கணவனின் அன்பு, மனைவியின் கீழ்ப்படிதல் குடும்ப உறவுக்கு உரம்.


🔌 எல்லா இணைப்புகளையும் கட்டுப்படுத்துவது Main Switch. அதுபோல, எல்லா உறவுகளையும் இணைத்து, சரி செய்வது கணவன்-மனைவி உறவே!


🚌 வாழ்க்கை என்ற வண்டிக்கு அச்சாணி போன்றது கணவன்-மனைவி உறவே!

பாதிக்கப்பட கூடாதது, பாதுகாக்கப்பட வேண்டியது கணவன்-மனைவி உறவே!


சரீரத்திற்கு மிக முக்கியம் இருதயம், மூளை போல வாழ்க்கைக்கு மிக முக்கியம் கணவன்-மனைவி உறவே!


📖 உறவு என்பது ஒரு புத்தகம்; 

📄 தவறு என்பது ஒரு பக்கம்;

🚫 ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தை இழந்து விடாதீர்கள்!