❓❓ இரட்டைப் புதிர்கள்❓❓
❓ யூதாஸ் "மனம் வருந்தினான்" எதனால்? மனச்சாட்சி வாதித்ததால்.
❓பேதுரு "மனம் திருந்தினான்" எதனால்? கிருபையால்.
❓"மகா புத்திமான்". அவன் யார்? தாவீது.
❓'மகா புத்திசாலி" அவள் யார்? அபிகாயில்.
❓பழைய எற்பாட்டில் “குடிக்க தண்ணீர்" கேட்டது யார்? எலியேசர்.
❓புதிய ஏற்பாட்டில் "குடிக்க தண்ணீர்" கேட்டது யார்? இயேசு.
❓தண்ணீர் “இரத்தமாக" மாறியதெங்கே? நதியிலே.
❓தண்ணீர் "இரத்தமாக" தோன்றியதெங்கே? ஏதோம் வனாந்தரத்திலே.
❓பிறக்கவில்லை ஆனால் மரித்தான்- ஆதாம்.
❓பிறந்தான் ஆனால் மரிக்கவில்லை- எலியா.
❓சீட்டுப்போட்டு ராஜாவானான் யார்? சவுல்.
❓சீட்டுப்போட்டு அப்போஸ்தலன் ஆனான் யார்? மத்தியா.
❓புத்தகத்தை வாசித்த பின் அதை நதியிலே எறிந்து போட்டவன்- செராயா(எரேமியா 51:63)
❓புத்தகத்தை வாசித்தபின் அதை நெருப்பிலே எறிந்து போட்டவன்- யோயாக்கிம் ராஜா(எரேமியா 36:23)