புத்தியில்லாத கன்னிகைகள்:

நற்பண்புகள் சில..


📌 மணவாளனை காண ஆவலோடு இருந்தவர்கள் தான்.


📌 வருகை தாமதித்தாலும் காத்திருந்தவர்கள் தான்.


📌 வேத வசனத்தை அறிந்தவர்கள் தான்.


📌 பரத்தின் சத்தத்தை கேட்டவர்கள் தான்.


📌 பரலோகம் செல்ல ஆசை உள்ளவர்கள் தான்.


📌 எண்ணெய் இல்லாததை சரி செய்ய ஓடினதும் உண்மை தான்.


📌 ஆராதிக்க வாஞ்சை இருந்ததும் உண்மை தான்.


📌 கல்யாண வீட்டுக்குள் வர முயற்சி எடுத்ததும் உண்மை தான்.


📌 இவை எல்லாவற்றிலும் திருப்தி அடைந்து விட்டார்களே! முக்கியமானதை மறந்து விட்டார்களே! கண்ட பலன்? 


📌 நான் உங்களை அறியேன் என்பது மட்டுமல்ல கதவுமல்லவா அடைப்பட்டு விட்டதே! பிந்தி நொந்து பிரயோஜனமில்லையே! 


📌 ஆகவே நாமும் கூட ஜாக்கிரதையாய் இருக்கலாமே! 


உங்களை அறியேன். மத்தேயு 25:12