பெண்கள்
பெண்களின் அலங்காரம்:👸🏻
👁️ கண்களுக்கு அலங்காரம்-பிறரிடம் உள்ள நல்லதை பார்ப்பது,
👂 காதுகளுக்கு அலங்காரம்-தேவ வார்த்தைகளை அடிக்கடி கேட்பது,
✋🏻 கைகளுக்கு அலங்காரம்-திக்கற்றவர், வரியவரை ஆதரிப்பது,
🧠 சிந்தைக்கு அலங்காரம்-கிறிஸ்துவின் சிந்தையை தரித்திருப்பது,
🫀 இருதயத்திற்கு அலங்காரம்-மற்றவர்களை மனப்பூர்வமாய் மன்னிப்பது.
👸🏻இவைகளை தினமும் பயிற்சித்தால் நாம் தான் ரூபவதி.
பெண்களின் திறமை:
💁🏻பிறர் வாழ தன் வாழ்வைத் தியாகம் செய்வாள்.
💁🏻எந்நிலையிலும் மெழுகாய் உருகுவாள்.
💁🏻உயிரணுவை கொடுத்தால் குழந்தையாய் உருவாக்குவாள்.
💁🏻வீட்டை கொடுத்தால் அதை குடும்பமாய் மாற்றுவாள்.
💁🏻கொடுப்பது எதுவாயினும் அதை பெரிதாக்குபவள் பெண் தானே!
பெண்களாகிய நாங்கள் :
👩🏻💼உணவும் சமைப்போம்-ஊழியமும் செய்வோம்,
👩🏻💼சலவையும் செய்வோம்-சத்தியமும் சொல்வோம்,
👩🏻💼அடுப்படியில் கிடந்தாலும்-அப்பாவை போற்றுவோம்,
👩🏻💼அதிகாரியாக இருந்தாலும்-அப்பாவுக்கு கீழ்ப்படிவோம்.
👩🏻💼உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டதும் நாங்களே!
👩🏻💼ஊரெல்லாம் நற்செய்தியை பரப்பியதும் நாங்களே!
👩🏻💼சோதனையை சாதனையால் வெல்வோம்.
👩🏻💼வேதனையை போதனையால் அழிப்போம்.
நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்:
👩🏻ஏவாளைப் போல்-கீழ்ப்படியாமையா?
👩🏻மிரியாமைப் போல்-புறங்கூறுதலா?
👩🏻ரூத்தைப் போல்-நற்குணசாலியா?
👩🏻எஸ்தரை போல்-உபவாசித்து ஜெபிக்கும் வீராங்கனையா?
👩🏻இல்லை கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு ஒரே வார்த்தையில் ok சொன்ன நம் பாட்டி சாரளை போலவா?நாம் யாரைப் போல் என நமக்கு தானே தெரியும்!
🐅முறம் எடுத்து புலி விரட்டிய பரம்பரை தான் நாம். அதற்காக கணவனை மிரட்டுவதும்,விரட்டுவதும் வேதம் ஏற்றுக்கொள்ளாது.
🔥நெருப்பு நல்லது தான்-அடுப்புக்குள் அடங்கி இருக்கும்வரை,
🔥தீ நல்லது தான்- தீபங்களாக எரியும் வரை,
👑குடும்பத்திற்கு கிரீடம் பெண் தான். ஆனாலும் மண்ணிலிருந்து அல்ல மனிதனிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்தான் நாம் என்பதை ஒரு போதும் மறந்து விட வேண்டாம்.
😊கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். நீதிமொழிகள் 31:30