எழுப்புதல் தாமதிப்பது ஏன்??
எழுப்புதல் தாமதிக்கிறது ஏனெனில்
1. ஜெபத்தின் அவசிய உணர்வு குன்றிப்போயிற்று.
2. எழுப்புதல் இன்றியே திருப்தியாக வாழப் பழகிவிட்டோம்.
3. பரிசுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
4. பலிபீடங்கள் அனலுமில்லாமல் குளிருமில்லாமல் வெதுவெதுப்பாய் உள்ளன.
5. ஆவியானவர் அசட்டை பண்ணப்படுகிறார்.
6. சபைகளில் தேவ சத்தத்திற்கு பஞ்சம் காணப்படும் நிலை.
7. பரமனை பறைசாற்றும் பலிபீடங்கள் மனிதருக்கு முகஸ்துதி காட்டும் இடம் ஆகிவிட்டது.
8. வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள் தங்கள் இஷ்டப்படி வாழ ஆரம்பித்து விட்டார்கள்.
9. தவறுகளைத் தட்டிக் கேட்டால் சபையை விட்டே வெளியேறும் அவலநிலை.
அப்புறம் என்ன ?
எழுப்புதல் தாமதிக்க தானே செய்யும் !!