ஜெபம்

ஜெபம்


1. கிறிஸ்தவர்களின் முக்கிய பணி ஜெபிப்பதாகும்.


2.ஜெபம் என்பது ஏதோ சாதனை அல்ல! சாதாரணமான ஒன்று தான். ஆனால் சாதிக்க வைக்கும்.


3.அடிக்கடி ஜெபித்துக் கொண்டே இருங்கள். ஏனெனில் ஜெபம் நமது ஆத்துமாவிற்கு ஒரு கேடகம். தேவனுக்கு ஓர் சுகந்த வாசனை சாத்தானுக்கோ அது ஒரு கசையடி.


4. நீங்கள் நூறாண்டுகள் வாழவிரும்புவது போல் திட்டமிட்டு வேலை செய்யுங்கள். ஆனால், நாளையே உங்கள் இறுதி நாள் என்பது போல ஜெபியுங்கள்.


5. வார்த்தை உச்சரிப்பின்றி வியாகுலப்பெருமூச்சுகளோடு ஏறெடுக்கப்படும் ஜெபமானது பெரும்பாலும் தேவனால் மறுக்க முடியாத ஒன்றாகிவிடும்.


6. ஒவ்வொரு பெரும் கிறிஸ்தவ சாதனைக்கு பின்னால் இருப்பது ஓர் பதிலளிக்கப்பட்ட ஜெப சரித்திரமே.


7. கடந்து சென்ற நாள் திரும்ப வருவதில்லை. ஆனால் கடந்த நாள் நீ செய்த ஜெபம் ஆசீர்வாதமாய் திரும்ப வரும். கொடுமையான நாட்களை எதிர்கொள்ள வல்லமையான ஆயுதம் ஜெபம்!!