♦️♦️♦️ வாழ்க்கை ♦️♦️♦️



♦️ வாழ்க்கை என்பது மேடும், பள்ளமும் நிறைந்ததே.


♦️எதுவுமே இல்லாமல் பிறந்து, 

எல்லாமே வேண்டுமென்று அலைந்து,

எதுவுமே நிரந்தரமில்லை என தெரிந்து,

உயிரும் கூட சொந்தமில்லை என உணர்ந்து,

இந்த உலகத்தை விட்டுப் போவது தான் வாழ்க்கை என்பர்.


♦️ ஆனாலும், ஏனோ தானோ என வாழ்வது வாழ்க்கை அல்ல; இப்படிதான் வாழ வேண்டும் என்பதே கிறிஸ்தவ வாழ்க்கை.


♦️ வாழ்க்கை என்னும் Ring tone சந்தோஷமாய் ஒலிக்க வேண்டுமா?


♦️ வார்த்தையால் பேசுவதை விட, வாழ்க்கையால் பேசிப் பாருங்கள்.

கிருபையைப் பெறுவதில் உள்ள ஆர்வம் இயேசுவை பிரதிபலித்து காட்டுவதில் உள்ளதா என யோசியுங்கள்.


♦️நமக்காக எழுதப்பட்ட வேதம் நம் கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் உள்ளதா என சிந்தியுங்கள்.


♦️ கடைசியாக, ஜெபம் என்னும் ஆயுதத்தை கையில் எடுப்போம்; ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்!