📌 யோபு தாத்தா 📌
👱🏻 முன் மாதிரியான யோபு தாத்தா. யோபு 1:1
👨🏼 யோபு எல்லோருக்கும் நல்ல ஒரு தாத்தா.
👨🏼 உத்தமர், சன்மார்க்கர், தேவனுக்கு பயந்தவர்.
👨🏼 சாட்சியுள்ள வாழ்க்கை, சவாலான வாழ்க்கை, முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தவர்.
👨🏼 அதிகாலை ஜெபம், அக்கினி ஜூவாலையாக்கும் என்பதை அப்போதே அறிந்தவர்.
👨🏼குடும்ப சமாதானத்துக்காக விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்.
👨🏼 தாங்கொண்ணா துயருறும் போதும் துவண்டு போகாது தேவனுக்கு உண்மையாய் வாழ்ந்தவர்.
👨🏼 நாவைக் கட்டுப்படுத்தி, வாக்குறுதிகளை கடைப்பிடித்தவர்.
👨🏼 சூழ்நிலை பாதகமாயிருந்தாலும் கர்த்தர் மேல் அளவுகடந்த, அசைக்க முடியாத, ஆழமான விசுவாசமுள்ளவர்.
👨🏼 பணம் படைத்தவராயினும், பணத்தை நம்பாமல், பரமனை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்.
👨🏼 10விதமான ஆசீர்வாதங்களைப் பெற்று, 140வருடம் உயிர்வாழ்ந்து நற்சாட்சி பெற்றவர்.
👨🏼 நாமும் அவரைப்போல் வாழ முயற்சித்தால் நலமாயிருக்குமே!