💕 என் மகனே... என் மகளே....💕
🔔 சூழ்நிலையைப் பார்த்து இடறல் அடையாதே.
🔔சிந்தனை சிதறுது என உலகத்திற்குள் புகுந்து விடாதே.
🔔பாவத்திற்கு பயந்து, விலகி ஓடிடு, படுகுழியில் விழுந்துவிடாதே.
🔔மாய இன்பங்களுக்கு மயங்கி, சாத்தான் வலையில் சிக்கிவிடாதே.
🔔 பொன் போன்ற இனிய வாழ்வை, எட்டிக்கசப்பாய் மாற்றிடாதே.
🔔 பாவம் முதலில் பூனை போல் பதுங்கி, சிங்கம் போல் பாயும் என்பதை மறந்திடாதே.
🔔 சுதந்திரம், விடுதலை ஆகிய உரிமைகளை தள்ளிவிடாதே.
🔔 சிந்தித்து, மனந்திரும்பி, கதறி ஜெபி.
🔔 அலைபாயும் மனதை அடக்கி, என்னை அண்டிக்கொண்டால், "என் கிருபை உன்னைத் தாங்கும்" என்பதை மறந்து போகாதே.
🔔 பாவ முதலீடுகளின் பலன், நஷ்டமும், அவமானமும் தான்.
🔔 உன் நிர்பந்த நிலையிலிருந்து உன்னைத் தூக்கி நிறுத்துவேன்! என ஆண்டவர், ஆதங்கத்தோடு அழைக்கிறார்.
வாலிபரே! வரும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்😇😇