🎊🎊 பெரும்பாடு மறைந்தது🎊🎊



🧕🏻 அவள் பெயர் சொல்லபடாதவள்;


😟 பெரும்பாடு என்னும் நோய், 

பெரும், பாடுப்படுத்தியதால் பெரும்பாடு பட்டாள்.


🧕🏻 பெரும், பாடுபட்டும் பெரும்பாடு தீரவில்லை. அரும்பாடுபட்டும் அவள்பாடு  தீரவில்லை.


💵 கையில் உள்ள காசெல்லாம் கரைந்தது தான் மிச்சம்.

💰 பையில் உள்ள பணமெல்லாம் பறந்தது தான் மிச்சம்.

🪙 சில்லறை எல்லாம் செலவழிந்தது தான் மிச்சம்.

🤦🏻‍♀️ வியாதி தீரும் என எண்ணி ஏமாந்தது தான் மிச்சம்.


ஆனாலும்,


🏃🏻‍♀ இயேசுவின், பார்வை பட்டாலே பார்வை கிடைக்கும் என்பதை அறிந்தவுடன், யாரையும் கேட்காமல், யாருக்கும் தெரியாமல் விரைந்து வந்தவள், இயேசுவின் வஸ்திர தொங்கலைத்

தொட்டாள்.


✋🏻 இயேசுவை பல கைகள் தொட்ட போதும், அவள் கை தொட்டவுடன் வல்லவரிடமிருந்து

வல்லூறு  வேகத்தில் வல்லமை பாய்ந்தது அவளுக்குள்.


💯 12 வருட வியாதி விடை பெற்றது ஒரு நொடியில். இதற்குக் காரணம் அவளின் விசுவாசமே. 

வேதத்தில் நீங்கா இடம் பெற்றவள் ஆனாள்.


தேவப் பிள்ளைகளே!


❓நாம் இயேசுவை தொட்டுப் பார்ப்பது எப்போது?

❓நம் வாழ்க்கையில் பெரும்பாடு தீருவது எப்போது?


😇 அவருடைய வஸ்திரத்தை தொட்டாள் 

(மாற்கு 5:28,29 )