பெண்களே!

ஒரு காலத்தில்:


அடுப்பங்கரையில் அடைக்கப்பட்டு, அஞ்சறைப்பெட்டிக்குள் மூடிவைக்கப்பட்டு, பல இன்னல்களுக்கு உட்பட்டு....


பின்னர்:


சட்டங்களை இயற்றி, பட்டங்களை வென்று புதுமைப் பெண்ணாக மாறி நிலவில் தடம் பதித்து, இன்றோ சிங்கப்பெண்ணாக மாறி இருக்கிறோம்.


இதெல்லாம் எப்படி?

ஆண்டவர் கூட இருக்கிறார் என்ற

விசுவாசம், துணிவு, தைரியம், தன்னம்பிக்கையால் தானே !


இவ்வளவு செய்த நம்மால் இந்தியாவை புரட்டிப் போட முடியாதா? என்ன?


வாருங்கள் "முடியும்" என்பதில் உள்ள "முடி" என்ற 2 எழுத்தை கையில் எடுப்போம்.


திட்டங்களைத் தீட்டுவோம்- செயல்களைச் செய்ய.


வீறுநடைபோடுவோம் -சுவிசேஷம் சொல்ல.


பாரினில் பறை சாற்றுவோம் - பரமனின் ராஜ்யம் செல்ல.


"சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம்_ _ _ _ _ _ _ _ _ " மாற்கு 13:10