☦️ சிலுவைப் பயணம்☦️
☦️ சிலுவை என்பது- மரணத்தை கிழித்து நித்திய பாதை திறந்த, சத்திய வாசலின் திறவுகோல் .
☦️ சிலுவை என்பது அடையாளச் சின்னம் அல்ல அடைக்கலச் சின்னம்.
☦️ கிறிஸ்து நமக்கு அடையாளம் காட்டி தந்த வாழ்க்கை பாதை; இயேசு கடந்து வந்த ஜீவபாதை; அது விசாலமான பாதை அல்ல; பரத்திற்கு போகும் இடுக்கமான இடுக்கமான பாதை.
☦️ கிறிஸ்துவின் பாதையில் மனம் போல் பயணிக்க இயலாது.இதில் பயணிக்க நீதி நியாயங்கள் உண்டு.
☦️ தாழ்மை, பொறுமை, சகிப்பு இவை நித்தமும் சுமக்க வேண்டிய சத்திய சிலுவை.
☦️ இந்தப் பாதை தான் பரிசுத்தவான்களை விசுவாசத்தோடு ஓடி முடிக்க வைத்தது.இவர்களுக்கு மட்டுமே நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது.
☦️ இந்த சிலுவை பயணத்திற்கு நாம் ஆயத்தமாய் இருக்கிறோமா!
"நம்முடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தார்" 1 பேதுரு 2: 24